புதுக்கோட்டை: புதுக்கோட்டை காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு. பாண்டியன் தலைமையிலான போலீசார் இன்று வாகன தணிக்கையில் ஈடுபட்டபோது வாகைகுளம் சந்திப்பு பகுதியில் வந்த லாரியை சோதனை செய்ததில் அதில் உரிய அரசு அனுமதியின்றி திருட்டுத்தனமாக மணல் திருடிச் சென்றது கண்டுபிடிக்கப்பட்டது.
இதுகுறித்து புதுக்கோட்டை காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு. பாண்டியன் வழக்கு பதிவு செய்து லாரியின் ஓட்டுநரான ஸ்ரீவைகுண்டம் மேல நட்டார்குளம் பகுதியைச் சேர்ந்த முத்துச்சாமி மகன் மாரியப்பன் (24) என்பவரை கைது செய்தார். மேலும் அவரிடமிருந்து டிப்பர் லாரியும், 3 யூனிட் மணலும் பறிமுதல் செய்யப்பட்டது.