திருநெல்வேலி : திருநெல்வேலி மூன்றடைப்பு அருகே கால்வாயில் மணல் திருட்டு நடைபெறுவதாக ஆழ்வானேரி கிராம நிா்வாக அலுவலா்க்கு தகவல் கிடைத்தது. அப்பகுதியில் அவா் ஆய்வுசெய்தபோது அது உண்மையென தெரியவந்ததால் இதுகுறித்து மூன்றடைப்பு காவல் நிலையத்தில் அவர் புகார் செய்தார். அதன் பேரில் காவல்துறையினர் சென்ற போது அனுமதியின்றி அங்கு மணல் அள்ளிக்கொண்டிருந்த மூன்று பேரை விசாரித்தனர்.
அவா்கள் மருதகுளத்தைச் சேர்ந்த எடிசன் (42). சாலமோன் (23). உலகம்மாள்புரத்தைச் சேர்ந்த கனகராஜ் (35). ஆகியோர் என்பது தெரிய வந்தது. அவர்களை கைது செய்த காவல்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்