இராமநாதபுரம் : சட்டவிரோதமாக மணல் அள்ளிய டிப்பர் லாரியை பிடித்தது தொடர்பாக
இராமநாதபுரம் மாவட்டம் ஆர்எஸ் மங்கலம் தாலுகா ராதானூர் அருகில் மணல் அள்ளுவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் மாலை 6 மணி அளவில் சிறப்பு சார்பு ஆய்வாளர் திரு ராமச்சந்திரன், திரு முருகேசன் , மற்றும் காவலர் திரு ஜெயசீலன் ஆகியோர்களுடன் சுமார் 7 மணிக்கு ஓடக்கரை ஆற்றுப்பகுதிக்கு சென்ற போது TN 65 9048 என்ற என் கொண்ட டாரஸ் லாரியில் மண் ஏற்றி கொண்டு வருவதை அறிந்த காவல்துறையினர் லாரியை சுற்றி வளைத்தனர். திருவாடானை வட்டம், கடம்பாகுடியை சேர்ந்த நடராஜன் மகன் காளீஸ்வரன், (27). என்பவரை கைது செய்து ஆர். எஸ் மங்கலம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். காவல் நிலைய சார்பு ஆய்வாளர் *முகமது சைபுல் ஹிசாம் வழக்கு பதிவு செய்து காளீஸ்வரனை சிறையில் அடைத்தனர்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு. அக்பர் அலி