திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் பணகுடி ரயில் நிலையம் அருகிலுள்ள தனியார் நிலத்தில் இரவு நேரத்தில் சிலா் மணல் அள்ளுவதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், பணகுடி ரயில் நிலையம் பகுதியில் கண்காணிப்பில் ஈடுபட்டபோது, தனியாருக்குச் சொந்தமான நிலத்தில் மர்ம நபர்கள் பொக்லைன் உதவியுடன் டிப்பர் லாரியில் மணல் அள்ளிக்கொண்டிருந்தனர். விசாரணையில், அவர்கள் பணகுடி பேரூராட்சி 13-ஆவது வார்டு உறுப்பினரின் கணவர் சுதாகர், சிவகாமிபுரத்தைச் சேர்ந்த சிவகுமார், மகேஷ் ஆகியோர் எனத் தெரிய வந்தது. 3 பேர் மீதும் வழக்குப்பதிந்த காவல்துறையினர் அவர்களை கைது செய்து மணல் அள்ள பயன்படுத்திய பொக்லைன் இயந்திரம், டிப்பர் லாரி ஆகியவை பறிமுதல் செய்து நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்