திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம், வி.கே.புரம் சென்மேரிஸ் பள்ளி அருகே அம்பாசமுத்திரம் மண்டல துணை வட்டாட்சியர் மாணிக்க வாசகம் இன்று வாகன தணிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது பாப்பான்குளம், தெற்கு தெருவை சேர்ந்த இசக்கிமுத்து (21). வெள்ளிகுளம், பள்ளிக் கூடத் தெருவை சேர்ந்த பரமசிவன் (20). தென்காசி மாவட்டம், செங்கோட்டை, சுப்பிரமணியபுரத்தை சேர்ந்த மதன் (23). ஆகியோர் ஓட்டி வந்த 3 டிராக்டர்களை நிறுத்தி சோதனை செய்தபோது உரிய அனுமதி சீட்டு இன்றி சட்டவிரோதமாக குளத்து மண்ணை ஏற்றிவந்தது தெரியவந்தது.
இது குறித்து வி.கே.புரம் காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் அடிப்படையில் வி.கே.புரம் காவல் ஆய்வாளர், சுஜித் ஆனந்த் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு இசக்கிமுத்து, பரமசிவன், மதன் ஆகிய மூவரையும் இன்று கைது செய்து அவர்களிடமிருந்து 3 யூனிட் குளத்து மண்ணையும், 3 டிராக்டர்களையும் பறிமுதல் செய்து நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்
சண்முகநாதன்