தேனி: தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே தெப்பம்பட்டி வேலப்பர் கோவில் செல்லும் சாலை பகுதியில உள்ள வெள்ளை பாறை ஓடையில் இரவு நேரங்களில் மணல் திருடுவதாக ராஜதானி காவல் நிலையத்திற்கு ரகசிய தகவல் வந்தது.
இதையடுத்து நேற்றுமுன்தினம் அதிகாலை சுமார் 4 மணி அளவில் காவல் ஆய்வாளர் திரு.சவுந்தரபாண்டி தலைமையில் எஸ் எஸ் ஐ கிருஷ்ணமூர்த்தி மற்றும் காவலர்கள் அங்கு சென்று பார்த்தபோது டிராக்டரில் மணல் திருடிக் கொண்டது தெரியவந்தது.
வாகனத்தை பறிமுதல் செய்த போலீசாரின் விசாரணையில், தெப்பம்பட்டி காளியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த பாண்டி மகன் இன்பராஜன் (34) என்பது தெரியவந்தது.பின்னர் இது சம்பந்தமாக வழக்கு பதிவு செய்த போலீசார் இன்பராஜை கைது செய்து சிறையில் அடைத்தனர்.