தேனி: தேனி மாவட்டம், கடமலை குண்டு பகுதிகளில் அதிகமான அளவில் மாட்டு வண்டியில் மணல் திருட்டு நடந்து வருவதாக போலீசாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், போலீசார் நேற்று ரோந்து சென்றனர்.
அங்குள்ள தர்மரஜபுரம் வைகை ஆற்றுப்படுகையில், ரோந்து சென்றபோது மாட்டு வண்டியில் மணல் அள்ளிய அதே கிராமத்தைச் சேர்ந்த செல்வம் (45), என்பவரை போலீசார் பிடித்தனர். இவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார் இதேபோல் மாட்டு வண்டி பறிமுதல் செய்யப்பட்டது.
தேனியிலிருந்து நமது நிருபர்
முருகன்