தேனி: இரவு நேரங்களில் மண், மணல் கடத்துவதாக மாவட்ட கனிம வளத்துறை அலுவலகத்திற்கு ரகசிய தகவல் வந்தது. இதனையடுத்து தனி வருவாய் ஆய்வாளர் திரு.பரமசிவம் தலைமை யிலான கனிம வள துறையினர் நேற்று இரவு கோட்டைப்பட்டி விளக்கு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர்.
அப்போது அவ்வழியாக வந்த டிப்பர் லாரியை மறித்து சோதனை செய்ததில் அரசு அனுமதியின்றி கிராவல் மண்ணை திருடி வந்தது தெரியவந்தது.
இதனையடுத்து, கனிமவள வருவாய் ஆய்வாளர் திரு. பரமசிவம் கொடுத்த புகாரின் பேரில் பழனிசெட்டிபட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து, தப்பி ஓடிய டிப்பர் லாரி டிரைவரை போலீசார் தேடி வருகின்றனர்.