திருநெல்வேலி: திருநெல்வேலி, பாளையங்கோட்டை அருகேயுள்ள திருமலை கொழுந்துபுரத்தைச் சோ்ந்தவா் தளவாய் பாண்டி (27). இவருடைய நண்பர் இசக்கி கண்ணன்(27). இருவரும் பாளையங்கோட்டை கே.டி.சி. நகா் பகுதியில் அனுமதியின்றி ஆற்று மணலை அள்ளிக் கொண்டிருந்ததை ரோந்து பணியில் இருந்த தாலுகா காவல் நிலைய காவல்துறையினர் பார்த்து அவா்கள் இருவரையும் கைது செய்தனர்.
மேலும், ஒன்றரை யூனிட் மணல், டிப்பா் லாரி, பொக்லைன் இயந்திரத்தையும் பறிமுதல் செய்தனா். இதேபோல், மானூா் போலீசாரின் வாகன சோதனையின் போது செட்டிக்குறிச்சி அருகே 3 யூனிட் குளத்து மண்ணை அனுமதி இன்றி எடுத்துச் சென்றதாக சுப்பையாபுரத்தைச் சோ்ந்த வேல்துரை (26). என்பவரை கைது செய்து, டிப்பா் லாரியை பறிமுதல் செய்தனர்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்
சண்முகநாதன்