புதுக்கோட்டை: மத்திய மண்டல காவல்துறை தலைவர் திரு.பாலகிருஷ்ணன் இ.கா.ப அவர்கள் மத்திய மண்டலத்தில் மணல் கடத்தல் செயலில் ஈடுபடுவோரை தடுத்து குற்ற செயலில் ஈடுபடுவோர்களை கைது செய்யவும் தனிப்படை அமைக்கப்பட்டது.
இத்தனிப்படையினர் கரூர் மாவட்டத்தில் மணல் கடத்தலை தடுத்து குற்ற செயலில் ஈடுபட்ட நபர்களை பிடித்து சிறப்பாக செயல்பட்ட புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த திருமயம் காவல்நிலைய உதவி ஆய்வாளர் திரு.வீரமணி, முதல் நிலைக்காவலர்கள் 1205 திரு..வினோத், 1511 திரு..கணேசன், ஆயுதப்படை காவலர்கள் திரு..நெப்போலியன்,திரு.. ரபேல்தாஸ் மற்றும் திரு..சரவணகுமார். ஆகியோரை இன்று 16.08.2021-ம் தேதி மத்திய மண்டல காவல்துறை தலைவர் திரு.பாலகிருஷ்ணன் இ.கா.ப., அவர்கள் நேரில் அழைத்து பாராட்டு சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.
என்றும் மக்கள் பாதுகாப்பிற்கும், நலனிற்கும்
புதுக்கோட்டை மாவட்ட காவல்துறை