தேனி: போடி அருகே உள்ள நாகலாபுரம் விலக்குபகுதியில் தேனி கனிமவளத்துறை ஆர்.ஐ. பரமசிவம், தலைமையிலான அதிகாரிகள் வாகன தணிக்கையில் ஈடுபட்டு வந்தனர்.
அப்போது அவ்வழியாக வந்த டிப்பர் லாரியை நிறுத்தி சோதனை செய்ததில், அரசு அனுமதியின்றி மணல் ஏற்றி வந்தது தெரியவந்தது. இதனையடுத்து வாகனத்தை பறிமுதல் செய்த கனிம வளத்துறையினர்,இது சம்பந்தமாக நாகலாபுரத்தை சேர்ந்த அறிவழகன் மீது போடி தாலுகா போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.