திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் நான்குனேரி அருகேயுள்ள முத்தலாபுரம் காட்டுப்பகுதியில் மணல் கடத்தப்படுவதாக நான்குனேரி காவல்துறையினருக்கு தகவல் கிடைத்ததன் பேரில், (08.07.2025) அன்று அப்பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது, அங்குள்ள காட்டுப்பகுதியில் மினி லாரியில் மணல் அள்ளிக்கொண்டிருந்த சிலரை
மடக்கிப் பிடித்ததில் 3 பேர் சிக்கினர். 2 போ் தப்பிவிட்டனர். விசாரணையில், பிடிபட்டவர்கள் நெடுங்குளத்தை சேர்ந்த கந்தையா(29). சுந்தர்(18). மற்றும் சிறார் என்பதும், தப்பியவர்கள் முருகன்(19). அசோக்(23). ஆகியோர் என்பதும் தெரிய வந்தது. நான்குனேரி காவல் ஆய்வாளர், சுரேஷ்குமார் வழக்குப்பதிந்து மூவரையும் கைது செய்து, மணல் கடத்தலுக்கு பயன்படுத்திய மினிலாரி, பைக் ஆகியவற்றைப் பறிமுதல் செய்தார். தப்பி ஓடியவா்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்