இராமநாதபுரம்: R.S.மங்கலம் வட்ட மண்டல துணை வட்டாட்சியரான திரு.உதயகுமார் என்பவருக்கு (02.09.2024) ஆம் தேதி அதிகாலையில் ஓடைக்கால் கோட்டக்கரை ஆற்றுப்படுகையில் அனுமதியின்றி மணல் அள்ளப்படுவதாக கிடைத்த தகவலின் பேரில், வட்டாட்சியருக்கு தகவல் தெரிவித்து பிறகு காவல்துறைக்கும் தகவல் தெரிவித்து வருவாய் ஆய்வாளர் திருமதி. ஆதிலட்சுமி, பகவதி மங்கலம் குரூப் (பொ) ஓடைக்கால் குரூப் கிராம நிர்வாக அலுவலர் திரு.பார்த்திபன் மற்றும் சார்பு ஆய்வாளர் திரு.முகம்மது சைபுல் ஹிசாம் தலைமைக்காவலர் 1838 திரு.சந்திரமோகன் காவலர் 1423 திரு.இளங்கோ ஆகியோர்களுடன் சேர்ந்து ஓடைக்கால் கோட்டக்கரை ஆற்றுப்படுகையில் அதிகாலை 04.30 மணிக்கு ரோந்து செய்து கண்காணித்து வந்த போது கோட்டக்கரை ஆற்றுப்படுகையில் திருட்டுத்தனமாக TN65 BB 8275 என்ற JCB மூலம் ஆற்று மணலை அள்ளி TN 38 BK 9843 என்ற டிப்பர் லாரியில் ஏற்றிக் கொண்டிருந்தவர்கள் அவர்களைப் பார்த்ததும் JCB டிரைவர் மாதவனைத் தவிர மற்ற குற்றவாளிகள் தலைமறைவாகி விட்டனர்.
பின்னர் வாகனங்களை தணிக்கை செய்த போது டிப்பர் லாரியில் சுமார் 1-1/2 யூனிட் ஆற்று மணல் இருந்ததாகவும் மேற்படி குற்றவாளிகள் எவ்வித அரசு அனுமதியின்றி திருட்டுத்தனமாக சுயலாபம் அடையும் நோக்கில் நீர்வள ஆதாரத்திற்கு பங்கம் விளைவிக்கும் என்று தெரிந்திருந்தும் சட்ட விரோதமாக ஆற்று மணலை அள்ளி வந்தது தெரியவந்ததால் மேற்படி 1-1/2 யூனிட் ஆற்று மணலுடன் டிப்பர் லாரி மற்றும் JCB யை கைப்பற்றி மேற்படி நபர்கள் மற்றும் மணல் அள்ள பயன்படுத்திய டிப்பர் மற்றும் JCB மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டி வாதி கொடுத்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
நமது குடியுரிமை நிருபர்
A. ராபர்ட் கென்னடி