தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்டம், ஒட்டப்பிடாரத்தை சேர்ந்த பெண்ணும், நாகர்கோவில் ஆசாரிபள்ளத்தை சேர்ந்த, நபரும் காதலித்து வந்துள்ளனர். இவர்கள் கடந்த (04.05.2022) -ம் தேதி வீட்டை விட்டு வெளியே சென்று திருமணம் செய்துகொண்டு, நாகர்கோவிலில் தங்கி உள்ளனர். மேற்படி இருவரும் நாகர்கோவிலில் இருந்ததை அறிந்த பெண் வீட்டாரின் உறவினர்கள், மேற்படி நபர்களை கன்னியாகுமரி மாவட்டத்திலிருந்து, (08.05.2022),ம் தேதி காரில் கடத்தி வந்துள்ளனர். மேற்படி சம்பவம் தொடர்பாக, திருநெல்வேலி மாவட்ட காவல்துறைக்கு, தகவல் தெரிவிக்கப்பட்டது.
நிலையில், நாங்குநேரி காவல் ஆய்வாளர் திரு.காளியப்பன், மற்றும் காவலர்கள் மேற்படி நபர்களை கடத்தி வந்த காரை, மடக்கிப் பிடித்து இருவரையும் பாதுகாப்பாக மீட்டனர். இச்சம்பவத்தை அறிந்த, திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.சரவணன், இ.கா.ப, அவர்கள் விரைவாகவும், துரிதமாகவும் செயல்பட்டு கடத்தலில் ஈடுபட்ட காரை மடக்கிப் பிடித்து, மேற்படி நபர்களை பாதுகாப்பாக மீட்ட, காவல் ஆய்வாளர் திரு.காளியப்பன், மற்றும் முதல்நிலை காவலர் திரு.மணிகண்டன், மற்றும் காவலர் திரு.முருகேசன், ஆகியோரை நேரில் அழைத்து பாராட்டி, பரிசு மற்றும் வெகுமதி வழங்கினார்.


















