தாம்பரம் : தாம்பரம் மாநகர காவல் பள்ளிக்கரணை மாவட்டம் செம்மஞ்சேரி சரகம் கண்ணகி நகர் காவல் நிலையத்தில் (8/5/2023), காலை 7:30 மணி அளவில் பவானி, கணவன் பெயர் நித்யா, கண்ணகி நகர் என்பவர் கொடுத்த புகாரில் தான் 8 வருடங்களுக்கு முன் காதலித்து நித்யாவை திருமணம் செய்ததாகவும் தற்போது இரண்டு பிள்ளைகள் இருப்பதாகவும் தன் கணவர் பெயிண்டர் வேலை செய்ததாகவும் 5 மாதங்கள் முன் ஜெயிலில் இருந்த போது தன் கணவரின் தம்பி பிரபாவிற்கு கண்ணகி நகரை சேர்ந்த வீரமருதுவிற்கும் பிரச்சனை ஏற்பட்டதாகவும் அப்போது வீரமருது கத்தியுடன் தங்கள் வீட்டிற்கு வந்து பிரபாவை வெளியே வா உன்னை கொல்ல போகிறேன் என்று மிரட்டியதாகவும் நாங்கள் கதவை திறக்காததால் கதவை வெட்டி விட்டு சென்று விட்டதாகவும், தன் கணவர் ஜெயிலிலிருந்து வெளியே வந்ததும் இந்த தகவலை தான் அவரிடம் சொன்னதாகவும், தன் கணவர் வீரமருதுவிடம் சென்று தான் இல்லாத போது வீட்டில் பிரச்சனை செய்தாயா? எனக்கேட்டும் மிரட்டியதாகவும் கூறியுள்ளார்.
இந்நிலையில் (7/5/2023), -ஆம் தேதி மாலை 7 மணி அளவில் தன் கணவர் வீட்டில் இருக்கும்போது வீரமருதுவும், தினேஷ் என்பவரும் தன் வீட்டிற்கு வந்த தன் கணவரிடமும் மைத்துனர் பிரபாவிடமும் சமாதானமாக பேச வேண்டும் என்ற இருவரையும் கூப்பிட்டதாகவும் பிரபா தண்ணி அடித்து விட்டு போதையில் இருந்ததால் தன் கணவர் மட்டும் சென்றதாகவும் தான் போக வேண்டாம் என்று கூறியும் தன் கணவர் என் பேச்சைக் கேட்காமல் நான் பார்த்துக் கொள்கிறேன் என்று சென்றதாகவும் காலை சுமார் 5 மணி அளவில் கண்ணகி நகர் போலீசார் தன் வீட்டிற்கு வந்து தன்னுடைய கணவர் இறந்து விட்டதாகவும் அவரை ராயப்பேட்டை மருத்துவமனை தவக்கிடங்கில் வைத்துள்ளதாகவும் நான் சென்று பார்த்தபோது தலையில் ரத்த காயங்களுடன் இருந்து சவக்கிடங்கில் வைத்துள்ளதாகவும் வீரமருது, தினேஷ், ஆகியோர் தன் கணவரை கொலை செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் அழைத்துச் சென்று கொலை செய்ததாக தெரிகிறது. என கூறப்பட்டிருந்தது. மேற்படி புகாரை பெற்று கண்ணகி நகர் காவல் ஆய்வாளர் கொலை வழக்கு பதிவு செய்து குற்றவாளிகளை விரைந்து கைது செய்ய வேண்டி தனி படை அமைக்கப்பட்டது தனி படையினர் வழக்கை விசாரணை செய்து கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளி வீரம் பொருந்துவை காரப்பாக்கத்தில் வைத்து கைது செய்து அவன் கொடுத்த ஒப்புதல் வாக்குமூலத்தின் படி தனது நண்பர்கள் குணா. மணிகண்டன். தினேஷ் .பிரவீன் குமார், வசந்த், அபி, ஆகியவர்கள் சேர்ந்து மது வாங்கி கொடுத்து போதையில் இருக்கும்போது கிரிக்கெட் மட்டையால் தலையில் அடித்து கத்தியால் குத்தியும் கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். அதன்படி (8/5/2023) ஆம் தேதி தலைமுறை குற்றவாளிகள் குணா, மணிகண்டன், தினேஷ் பாபு ,பிரவீன் குமார், ஆகியோர்களை கைது செய்து அவர்கள் கொலைக்கு பயன்படுத்திய கிரிக்கெட் மட்டை கட்டி இரண்டு இருசக்கர வாகனம் ஆகியவற்றை கைப்பற்றி கொற்றவாளிகளை நீதிமன்றத்தில் ஆஜர் செய்து புழல் சிறையில் அடைக்கப்பட்டனர். தலைமறைவு குற்றவாளிகளை தேடி தனிப்படையினர் ஆந்திரா சென்று உள்ளனர்.
காஞ்சிபுரத்திலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.ராஜ் கமல்