தேனி மாவட்டத்தில் கொரோனா இரண்டாவது அலை நோய் தொற்று பரவாமல் முற்றிலும் தடுக்கும் விதமாக பல்வேறு கட்டமாக தேனி மாவட்ட காவல்துறையினரால் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
சின்னமனூர் பகுதிகளில் மக்கள் வேலை செய்யும் பகுதிகளுக்கு சென்று, வேலை செய்யும் இடங்களில் நோய் தொற்று பரவாமல் எவ்வாறு பாதுகாப்பாக இருப்பது, வேலை முடித்து விட்டு வீட்டிற்கு சென்றவுடன் தங்களையும் தங்களது குடும்பத்தையும் எவ்வாறு பாதுகாப்பாக வைத்துக் கொள்வது போன்ற வழிமுறைகளையும் எடுத்துக்கூறி துண்டு பிரசுரங்கள் மற்றும் இலவச முகக்கவசங்கள் வழங்கியும் விழிப்புணர்வு ஏற்படுத்திய சின்னமனூர் காவல் நிலைய காவல்துறையினரின் செயல் மக்களிடையே பெரும் வரவேற்பை ஏற்படுத்தியது.