மதுரை: மதுரையில் தமிழரசி கண்டித்து அனைத்து மக்கள் நீதிக் கட்சி இயக்கம் ஆர்ப்பாட்டம் நடத்தியது. தமிழகத்தில் அரசு மதுபான கடைகளை மூட வலியுறுத்தி, அனைத்து மக்கள் நீதிக் கட்சியினர் மாவட்டத் தலைவர் எ. சுரேஷ் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். மாநில நிர்வாகி செல்வம், கட்சியின் நிறுவனத் தலைவர் யோசன், ஆர்ப்பாட்டை துவங்கி வைத்து, சிறப்புரை ஆற்றினார் . பாஜக மாவட்ட நிர்வாகி மகா. சுசீந்திரன், தென்னிந்திய பார்வர்ட் பிளாக் நிர்வாகி திருமாறன்ஜி, அனைத்து மக்கள் கட்சி
நிர்வாகிகள் வேலுச்சாமி, பூமி ராஜன், கதிரவன், தமிழ் சூரியன், பொன் சுப்பையா, அழகர்சாமி, சங்கர பாண்டி, முகமது தாரீப், மணி, கணேஷ்குமார் உட்பட பலர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்

திரு.ரவி