கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறையில் பொதுமக்கள் அளித்த புகார் மனுக்கள் மீது காவல்நிலையங்களில் முறையான தீர்வு மற்றும் மனுக்களின் மீதான நடவடிக்கைகளில் திருப்தி பெறாத புகார்தாரர்களை நேரில் அழைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.சமய்சிங் மீனா, இ.கா.ப., அவர்களின் தலைமையில் ஒவ்வொரு வார புதன்கிழமையும் மக்கள் குறை தீர்வு கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. (20.12.2023)-ந் தேதி கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் நடைபெற்ற முகாமில் பொதுமக்கள் உயர் அதிகாரிகளிடம் அளித்த புகார் மனுக்களில் காவல்நிலையங்களில் முறையான தீர்வு காணமுடியாத 20 மனுக்களில் 11 மனுக்கள் மீது உரிய முறையில் விசாரணை நடத்தப்பட்டு தீர்வு காணப்பட்டது.
நீலுவையில் உள்ள 09 மனுதாரர்களின் குறைகளை கேட்டறிந்து அதற்கான உரிய நடவடிக்கை எடுக்க அனுப்பி வைக்கப்பட்டது. மேலும் புதிதாக 25 புகார் மனுக்களை பொதுமக்களிடம் பெற்றுக்கொண்டார். இக்கூட்டத்தில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள் திரு.ஜவஹர்லால், திரு.மணிகண்டன், துணை காவல் கண்காணிப்பாளர்கள் திரு.இரமேஷ், திரு.மகேஷ், திரு.மனோஜ் குமார், காவல் ஆய்வாளர்கள், காவல் உதவி ஆய்வாளர்கள், கள்ளக்குறிச்சி மாவட்ட தனிப்பிரிவு காவல் ஆய்வாளர் திரு.சண்முகம் மற்றும் மனுதாரர்கள் பலர் பங்கேற்றனர்.