தர்மபுரி: தர்மபுரி மாவட்டம் அரூர் காவல் நிலையத்தில் சிறப்பு குறைதீர்க்கும் முகாம் நடைபெற்றது. இதில் அரூர், கோட்டப்பட்டி, கோபிநாதம்பட்டி, கம்பைநல்லூர் ஆகிய காவல் நிலையங்களில் புகார் அளிக்கப்பட்டிருந்த மனுதாரர் மற்றும் எதிர்மனுதாரர் என இரு தரப்பினரையும் நேரடியாக அழைத்து சுமார் 19 மனுக்கள் மீது தீர்வு காணப்பட்டது. மேலும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மாவட்ட காவல் அலுவலகத்தில் மற்றும் முதல்வர் தனிப்பிரிவில் பொதுமக்கள் அளித்த மனுக்கள் மீதும் விசாரித்து நடவடிக்கை எடுக்கப்பட்டது.