தென்காசி: ஆதரவற்றவர்கள் மற்றும் முதியவர்களுக்கு உதவும் வகையில் மக்களைத் தேடி மருத்துவம் என்ற திட்டம் தமிழக அரசால் துவங்கப்பட்டு நாடு முழுவதும் செயல்பட்டு வருகிறது.
தென்காசி மாவட்ட புளியரை காவல்நிலைய சார்பு ஆய்வாளர் திரு.முத்து கணேஷ் அவர்கள் தினமும் தனது அன்றாட காவல் பணிகளுக்கு இடையில் தொடர்ந்து மருத்துவக் குழுவுடன் இணைந்து பொதுமக்களுக்கு உதவி செய்து வருகிறார்.
சார்பு ஆய்வாளரின் மனிதநேயமிக்க இச்செயல் அப்பகுதி சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்களிடையே மிகுந்த பாராட்டை பெற்று வருகிறது.