திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம், அத்திப்பட்டு முதல்நிலை ஊராட்சியில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் நடைபெற்றது. முகாமில் நகர்புற மற்றும் ஊரக வளர்ச்சி துறை, வருவாய் துறை, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை,தொழிலாளர் நலத்துறை,காவல்துறை உள்ளிட்ட துறைகளைச் சேர்ந்த அலுவலர்கள் முகாமிட்டு பொதுமக்கள் அளித்த மனுக்களுக்கு உடனடி தீர்வு காணும் பொருட்டு நடவடிக்கைகளை மேற்கொண்டனர். இந்த முகாமினை பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகர் துவக்கி வைத்தார். மீஞ்சூர் வட்டார சுகாதார மையத்தின் சார்பில் மருத்துவ முகாமும் நடைபெற்றது. இதில் மீஞ்சூர் ஒன்றியக் குழு பெருந்தலைவர் அத்திப்பட்டு ஜி ரவி,பொன்னேரி சாராட்சியர் வாகே சங்கெத் பல்வந்த், மீஞ்சூர் வட்டார வளர்ச்சி அலுவலர் குமார்,அத்திப்பட்டு முதல் நிலை ஊராட்சி மன்ற துணைத் தலைவர் எம்.டி.ஜி. கதிர்வேல், ஒன்றிய கவுன்சிலர் சங்கீதா அன்பழகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
திருவள்ளூரில் இருந்து குடியுரிமை நிருபர்
திரு. பாபு