திண்டுக்கல் : திண்டுக்கல் நகர் தாலுகா காவல் நிலையம் மாநில அளவில் சிறந்த காவல் நிலையங்களில் 3-ம் இடம் பிடித்தது. அதனை தொடர்ந்து குடியரசு தின விழாவில் சிறந்த காவல் நிலையத்திற்கான சான்றிதழை தமிழக முதல்வர் திரு.ஸ்டாலின், தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் திரு. பாலாண்டியிடம் வழங்கினார். இதையடுத்து திண்டுக்கல் தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் பாலாண்டி திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.பாஸ்கரன், அவர்களை சந்தித்து வாழ்த்து பெற்றார். அதனைத் தொடர்ந்து தாலுகா காவல் நிலையத்தில் ஆய்வாளர் பாலாண்டி, சார்பு ஆய்வாளர்கள் விஜய்,மலைச்சாமி, ஜெய்கணேஷ்,சிறப்பு சார்பு ஆய்வாளர்கள், மற்றும் காவல்துறையினர் அனைவரும் மகிழ்ச்சியுடன் குழு புகைப்படங்கள் எடுத்துக் கொண்டனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.