துாத்துக்குடி : துாத்துக்குடி மாவட்டம், செய்துங்கநல்லுார் அருகே தாதன்குளத்தைச் சேர்ந்த சுடலைமுத்து, (43), இவரது முதல் மனைவி காளியம்மாள் இறந்துவிட்டதால், முப்பிடாதி, (40), என்பவரை இரண்டாவதாக, திருமணம் செய்து கொண்டார். காளியம்மாள் மகள் மீனா, (23), இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த, ஒருவருக்கும் ஐந்து ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. நான்கு வயதில் மகன் உள்ளார். கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, நாங்குநேரியைச் ,சேர்ந்த ஒருவரை 10 மாதங்களுக்கு முன், மீனா இரண்டாவது திருமணம் செய்து கொண்டார்.
மீனா இரண்டாவது திருமணம் செய்து கொண்டது அவரது குடும்பத்தினருக்கு, பிடிக்கவில்லை. தாதன்குளத்தில் நேற்று முன்தினம் நடந்த கோவில், கொடை விழாவிற்கு, மீனா வந்திருந்தார். சித்தி பார்வதியின் வீட்டில் அவர் இருந்தபோது, இப்பிரச்னையில் ஆத்திரத்தில் இருந்த, சுடலைமுத்து மற்றும் குடும்பத்தினர் அரிவாளால், மீனாவை வெட்டிக் கொலை செய்தனர். இவ்வழக்கில் சுடலைமுத்து, மனைவி முப்பிடாதி, மகன் மாயாண்டி, உறவினர் வீரம்மாள் ஆகிய நால்வரை செய்துங்க நல்லுார், காவல் துறையினர், கைது செய்தனர்.