மதுரை : மதுரை மாநகர் கோசாகுளம் பகுதியைச் சேர்ந்த (11). வயது சிறுமி தாய் உயிரிழந்த நிலையில், தந்தையும் வேறு திருமணம் செய்ததால் சிறுமி மற்றும் அவரது அண்ணான் ஆகிய இருவரும் வளர்ப்பு பெற்றோரான பெரியம்மா, பெரியப்பா ஆகியோரின் பராமரிப்பில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில், சில மாதங்களுக்கு முன்பாக சிறுமியின் அண்ணன் கண்மாயில் மூழ்கி உயிரிழந்த நிலையில், சிறுமி மட்டும் தனது வளர்ப்பு பெற்றோருடன் இருந்துவந்துள்ளார். மதுரை மாநகர் பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் 5-ஆம் வகுப்பு படித்து வந்தார். பள்ளி தேர்வு விடுமுறை என்பதால், வீட்டில் இருந்துவந்துள்ளார். இந்நிலையில், கடந்த வியாழக்கிழமை மாலை சிறுமி கழிவுறைக்குள் சென்று விட்டு கதவு திறக்கவில்லை என கூறி அருகில் உள்ளவர்களை வளர்ப்பு பெற்றோர் கூறி அழைத்துள்ளனர். அப்போது அருகில் உள்ளவர்கள் வந்தபோது பெற்றோர்களே கதவை உடைத்து சிறுமியை தூக்கி வந்து வள்ளுவர்காலனி பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தபோது அங்குள்ள மருத்துவர்கள் அரசு மருத்துவமனைக்கு செல்ல பரிந்துரை செய்துள்ளனர். இதையடுத்து, அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது சிறுமி உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து, சிறுமியின் உயிரிழப்பில் சந்தேகம் இருப்பதாக கூறி கூடல்
புதூர் காவல்துறையினர் சந்தேக மரணம் என, வழக்குப்பதிவு செய்து அரசு மருத்துவ
மனைக்கு உடற்கூராய்விற்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில் , உடற்கூராய்வின் போது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது.
இதையடுத்து, சிறுமியின் உயிரிழந்தபோது வீட்டில் சிறுமியுடன் இருந்த வளர்ப்பு பெற்றோரான பெரியப்பா செந்தில்குமார் மற்றும் அவரது மனைவி சந்திரபாண்டி ஆகிய இருவரையும் அழைத்துச்சென்று தீவிர விசாரணை மேற்கொண்டனர். இதனிடையே, சிறுமியின் உயிரிழப்பு தொடர்பாக குழந்தைகள் நல அலுவலர்களும் விசாரணை நடத்தினர்.
காவல்துறையினர் வளர்ப்பு பெற்றோரிடம் நடத்திய தீவிர விசாரணையில் சிறுமியின் வளர்ப்பு பெற்றோரான பெரியப்பாவானா, ராணுவ வீரராக இருந்துவரும் செந்தில்குமார் வளர்ப்பு மகளான சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தபோது வளர்ப்பு மகள் கத்தியதால் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளதும், பின்னர் அங்கு வந்த செந்தில்
குமாரின் மனைவி சந்திரபாண்டி வளர்ப்பு மகளின் உயிரிழந்த நிலையில் கிடந்ததை பார்த்த சிறுமியின் உடலை கழிவறைக்குள் போட்டுவிட்டு தண்ணீர் குழாயை திறந்துவிட்டு கதவை மூடிவிட்டு பின்னர் , அருகில் உள்ளவர்களை அழைத்து சிறுமி குளிக்கசென்று நீண்ட நேரம் ஆகியும் கதவு திறக்கவில்லை என, கூறி கதறி அழுது நடித்து அழைத்தபோதே, அருகில் உள்ளவர்கள் வீட்டிற்குள் நுழையும் போதே இவர்களாகவே கதவை உடைத்து
விட்டு சிறுமி மயங்கி விழுந்து உயிரிழந்ததாகவும், கடைசியாக காளான் பிரியாணி சாப்பிட்டார்.
அதன் காரணமாக புட்பாய்சன் ஆகி மயங்கியிருக்கலாம் என, கூறியதோடு அருகில் உள்ளவர்களையும் கழிவறையில் சிறுமி மயங்கி கிடப்பதாக ஏமாற்றி இவர்களே கதவை உடைத்தும் நடித்தும் நாடகமாடி அருகில் உள்ளவர்களை நம்பவைத்ததும் தெரிய
வந்துள்ளது. இதனைத்தொடர்ந்து, விசாரணையின் அடிப்படையில் (11). வயது வளர்ப்பு மகளான சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்ததாக போக்சோ வழக்கின் கீழ் ராணுவ வீரரான செந்தில்குமார் மற்றும் கொலை சம்பவத்தை மறைத்து உடைந்தயாக இருந்ததாக அவரது மனைவி சந்திரபாண்டி ஆகிய இருவரையும் கூடல்புதூர் காவல்துறையினர கைது செய்தனர். பின்னர், போக்சா நீதிமன்ற நீதிபதி முன்பாக ஆஜர்படுத்
தப்பட்ட பின்னர் சிறையில் அடைக்கப்பட்டனர். வளர்ப்பு மகளான (11) வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த கொடூர பெரியப்பாவான செந்தில்குமார் கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக ராணுவத்தில் பணிபுரிந்து சுபேதாராக இருந்து
வருகிறார். சில நாட்களாக விடுமுறையில் வந்து இதுபோன்ற சொல்லொணா கொடூரத்தை அரங்கேற்றியது குறிப்பிடதக்கது.(11). வயது சிறுமி பாலியல் கொடூர கொலை வழக்கில் தீவிர விசாரணை நடத்தி கொலையாளியான வளர்ப்பு பெற்றோரை கைது செய்த கூடல்புதூர் மற்றும் தனிப்படை காவல்துறையினருக்கு மாநகர காவல் ஆணையர் பாராட்டு தெரிவித்தார்.
மதுரையிலிருந்து நமது நிருபர்

திரு.ரவி