சென்னை: மகளிர் தினத்தை முன்னிட்டு, போலீஸ் நியூஸ் பிளஸ் ஆசிரியர் மற்றும் நியூஸ் மீடியா அசோசியேஷன் ஆப் இந்தியா சங்கத்தின் தேசிய தலைவர் திரு.அ.சார்லஸ் அவர்களின் வழிகாட்டுதலின்படி, அசோசியேஷன் உறுப்பினர் திரு.அசோக் குமார் அவர்கள் மனிதநேய மிக்க உதவி செய்தார். சென்னை பகுதியில் வசித்து வரும் அஜினா சுல்தான் பாய் அவர்களின் குடும்பத்திற்கு, தற்போது நடைபெற்று வரும் ரமலான் நோன்பை கருத்தில் கொண்டு, அரிசி பைகள், இனிப்பு மற்றும் கார உணவுப் பொருட்கள் மற்றும் பண உதவி வழங்கினார். இந்த உதவி நிகழ்வின் மூலம், தேவையுடைய குடும்பங்களுக்கு உதவ வேண்டும் என்ற சமூகப் பொறுப்புணர்வு வலியுறுத்தப்பட்டது. “இல்லாதவர்களுக்கு இயன்ற உதவியை செய்வோம்” என்ற நோக்கத்துடன் இந்த உதவி வழங்கப்பட்டது .
















