விருதுநகர்: காரியாபட்டி அருகே நடந்த, கருத்தரங்கில் நுகர்வோர் பாதுகாப்பு குறித்து மகளிர் சுய உதவி குழுக்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் 2019ல் தெரிவிக்கப்பட்ட அனைத்து விதமான பாதுகாப்பு அம்சங்கள் குறித்து ம் நுகர்வோர் உரிமைகள், கடமைகள் , நேரடி விற்பனை நியாயமற்ற ஒப்பந்தங்கள். மின்னணு வணிகம், போலி விளம்பரங்கள் மற்றும் நுகர்வோர் நீதிமன்ற தீர்ப்புகள் குறித்து பயிற்சி வழங்கப் பட்டது. மேலும், நுகர்வோர்களுக்கு ஏற்படும் குறைகளை பதிவு செய்து நிவாரணம் பெறுவது, அன்றாட வாழ்வில் நுகர்வோர் சந்திக்கும் பிரச்சனைகளை எவ்வாறு தீர்ப்பது, உணவு கலப்படத்தால் ஏற்படும் பாதிப்புகள் கலப்படத்தை கண்டறியும் தேர்வு முறை, பொது விநியோக திட்டம் தொடர்பாக பொதுமக்க ளுக்கு சந்தேகங்களை எவ்வாறு நிவர்த்தி செய்து குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. பயிற்சியில், நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் 2019 உள்ளடக்கிய பயிற்சி கையேடுகள்
வழங்கப் பட்டது.
மதுரையிலிருந்து நமது நிருபர்

திரு.ரவி