மதுரை: தேசிய மகளிர் ஆணையம் மற்றும் மதுரை மாவட்ட சட்டப்பணி ஆணைக்குழு ஆணைப்படி வாடிப்பட்டிவட்ட சட்ட பணிக்குழு சார்பாக மகளிருக்கு சட்ட விழிப்புணர்வு முகாம் புதுப் பட்டியில் நடந்தது. இந்த முகாமினை, குறிஞ்சி வட்டாரக்களஞ்சியம் தலைவி வள்ளி துவக்கி
வைத்தார். வாடிப்பட்டி வட்ட சட்டபணி குழு வழக்கறிஞர்கள் செல்வகுமார், விஜயகுமார், தயாநிதி, சீனிவாசன், சுமிதா, சாந்தி ஆகியோர் மகளிருக்கான பல்வேறு சட்டங்கள் பற்றி விளக்கி பேசினார். முடிவில், சட்ட பணி தன்னார்வலர் நன்றி கூறினார்.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி