திருநெல்வேலி : திருநெல்வேலி டவுன் மேட்டு தெருவை சேர்ந்தவர் தர்மராஜ் மகன் முருகன் (50). அப்பகுதியை சேர்ந்த ஒரு (11). வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. டவுன் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் இது பற்றிய புகார் பெற்றவுடன் காவல் ஆய்வாளர், அந்தோணி ஜெகதா, தலைமையில் 2 மணி நேரத்தில் குற்றவாளியை போக்சோ வழக்கில் கைது செய்து நீதிமன்ற நடவடிக்கைக்கு உட்படுத்த தயாராகி வருகின்றனர்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு. சண்முகநாதன்