திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றத்தில் அனைத்து மகளிர் காவல் நிலையம் புதிதாக அமைக்கப்பட்டதை சிறுபான்மை மற்றும் வெளிநாடு வாழ் நலத்துறை அமைச்சர் சாமு நாசர் ரிப்பன் வெட்டி குத்து விளக்கு ஏற்றி திறந்து வைத்தார். இதில் மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் மாதவரம் சட்டமன்ற உறுப்பினர் சுதர்சனம் பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகர் காவல் ஆணையர் சங்கர் துணை ஆணையர் பாலகிருஷ்ணன் ஆகியோர் உடன் இருந்தனர் பின்னர் புதிய காவல் நிலையத்தினை அமைச்சர் பார்வையிட்டார்.
இந்த காவல் நிலையத்தில் மீஞ்சூர் செங்குன்றம் சோழவரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் மகளிர் தொடர்பான புகார்கள் அளிக்கும் விதமாக பொது மக்களின் கோரிக்கையை ஏற்று காவல் ஆய்வாளர் பரணி உதவி காவல் ஆய்வாளர் உள்ளிட்ட 9 பேர் கொண்ட காவல் நிலையம் புதிதாக அமைக்கப்பட்டு பொதுமக்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைக்கப்பட்டது. குறிப்பிடத்தக்கது கடந்த 2024 ஆம் ஆண்டு மட்டும் 994 மனுக்கள் பெறப்பட்டுள்ளது 88 போக்சோ வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. என்றும் காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது.
செங்குன்றம் காவல் நிலைய வளாகத்திலேயே அனைத்து மகளிர் காவல் நிலையம் செயல்படுத்தப்படுகிறது.
திருவள்ளூரில் இருந்து குடியுரிமை நிருபர்

திரு. பாபு