திருச்சி: திருச்சி மாநகரில் சமீப காலமாக பல்வேறு கொலை, கொள்ளை மற்றும் பெண்களிடம் அத்து மீறுதல் போன்ற சம்பவங்கள் தொடர்ந்துக்கொண்டிருக்கின்றன.
இந்தநிலையில் திருச்சி மாநகர காவல் ஆணையர் திரு.அருண் உத்தரவின்படி, பொன்மலை அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் மற்றும் காவல் ஆளிநர்கள் டி மார்ட் வணிக வளாகத்தில் குழந்தை உரிமைகளின் வகைகள் மற்றும் குடும்ப வன்முறை, வரதட்சனை தடுப்பு, பணி தளத்தில் வேலை செய்யும் பெண்களுக்கான பாலியல் வன்கொடுமை, குழந்தைத் திருமண தடுப்பு, குழந்தைத் தொழிலாளர் ஒழிப்பு, பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளை பாதுகாத்தல் குறித்து துண்டு பிரசுரங்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
மேலும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் பற்றி தெரிவிக்க இலவச கட்டணமில்லா உதவி எண் 1098 பற்றியும், பெண்களுக்கான உதவி எண் 181 குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
திருச்சியிலிருந்து நமது குடியுரிமை நிருபர்