கடலூர்: கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. S. ஜெயக்குமார், IPS அவர்கள் சேத்தியாதோப்பு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின்போது நிலையத்தின் செயல்பாடுகள், பதிவேடுகள், மனுக்கள் மற்றும் நிலுவையில் உள்ள வழக்குகள் குறித்த விவரங்களை பரிசீலித்த அவர், பொதுமக்களிடமிருந்து பெறப்படும் புகார் மனுக்கள் மீது உடனடியாகவும் தகுந்த முறையிலும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காவல் அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார்.
















