அரியலூர் : அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.விஷ்வேஷ் பா.சாஸ்திரி இ.கா.ப., அவர்களால் (17.10.2025) அரியலூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் பணிபுரியும் பெண் அமைச்சுப் பணியாளர்கள் மற்றும் பெண் காவல் ஆளிநர்கள் பணி இடைவேளை நேரத்தில், கர்ப்பிணி பெண்கள், உடல்நிலை சரியில்லாதவர்கள் ஓய்வு எடுக்கும் வகையில் ஓய்வு அறை திறக்கப்பட்டது. இந்நிகழ்வின் போது திரு.முத்தமிழ்ச்செல்வன் அரியலூர் அவர்கள், மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் அமைச்சுப் பணி நிர்வாக அலுவலர்கள், கண்காணிப்பாளர்கள், மற்ற காவல் உயர் அதிகாரிகள் மற்றும் அமைச்சு பணியாளர்கள் உடன் இருந்தார்கள்.