நெல்லை: நெல்லை மாவட்டம், தெற்கு தெருவை சேர்ந்தவர் வெள்ளத்துரை. இவரது மகன்கள் வினோத் 26,கார்த்திக் 23. இவர்கள் மூன்று பேரும் ஒன்றாக சேர்ந்து மது அருந்தியுள்ளனர்.
அப்போது இவர்களுக்கிடையே ஏற்பட்ட வாக்குவாதத்தில் கார்த்திக் வெள்ளத்துரை ஆகிய இருவரும் சேர்ந்து வினோத்தை தாக்கியுள்ளனர். இதில் காயமடைந்த அவர் உயிரிழந்தார்.இதுகுறித்து அம்பை போலீசார் வழக்குப்பதிவு செய்து கார்த்திகை ஏற்கனவே கைது செய்தனர்.
இந்நிலையில் இந்த வழக்கில் தலைமறைவாக இருந்த அவரது தந்தையை போலீசார் கைது செய்து நேற்று சிறையில் அடைத்தனர்.