திருவள்ளுர்: பாராளுமன்ற தேர்தலுக்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. பாதுகாப்பு அறைகளில் இருந்து வாக்குப்பதிவு இயந்திரங்கள் அந்தந்த சட்டமன்ற தொகுதிகளுக்கு அனுப்பி வைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. திருவள்ளுர் மாவட்ட தலைநகரில் இயந்திரங்கள் வைப்பறையில் இருந்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பிரித்து அனுப்பப்பட்டன. பொன்னேரி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனைத்தும் மீன்வள கல்லூரிக்கு கொண்டு வரப்பட்டன. பொன்னேரி உதவி தேர்தல் நடத்தும் அலுவலரும், சார் ஆட்சியருமான வாகே சங்கேத் பல்வந்த், வட்டாட்சியர் மதிவாணன், அனைத்து கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் லாரியில் சீல் அகற்றப்பட்டு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனைத்தும் ஸ்டராங் ரூமில் வைக்கப்பட்டு சீல் வைக்கப்பட்டது. 24மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு, சிசிடிவி கேமெராக்கள் பொருத்தப்பட்டு தீவிர பாதுகாப்புடன் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளன.
திருவள்ளூரில் இருந்து குடியுரிமை நிருபர்
திரு. பாபு