நெல்லை: நெல்லை சந்திப்பு ஸ்டேஷனில் சிறப்பு எஸ்ஐயாக பணியாற்றியவர் உயர்திரு,ஜான்சன் அவர்கள் நேற்று மூச்சுத்திணறல் காரணமாக உயிரிழந்தார். இது நெல்லை காவல் துறையினர் இடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
.இந்நிலையில், இவரது இறப்பு அவரது சொந்த ஊரான பிள்ளையார்குளம் கிராம மக்களுக்கு பெரும் இழப்பாக உள்ளது. இந்நிலையில் அண்ணாரது படத்திற்கு நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் மாநகர போலீஸ் கமிஷனர்(பொறுப்பு) பிரவின் குமார் அபிநபு,துணை போலீஸ் கமிஷனர் சீனிவாசன்,உதவி போலீஸ் கமிஷனர்கள் ஆறுமுகம்,சதீஷ்குமார்,நுண்ணறிவு பிரிவு இன்ஸ்பெக்டர் ரமேஷ்கண்ணா மற்றும் போலீஸ்சார் அஞ்சலி செலுத்தினர்.