திருநெல்வேலி : திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர் ரூபேஷ் குமார் மீனா, இ.கா.ப., மேற்பார்வையில், கல்லூரி மாணவிகளின் பாதுகாப்பு மற்றும் நன்மைக்காக போலீஸ் அக்கா என்ற திட்டத்தின் கீழ் ஒவ்வொரு கல்லூரிக்கும் ஒரு பெண் காவலர் என்று உருவாக்கப்பட்டுள்ளது. அதன்படி திருநெல்வேலி மாநகர காவல் துணை ஆணையர், G.S.அனிதா,(தலைமையிடம்) நியமிக்கப்பட்ட பெண் காவலர்களை நேரில் அழைத்து, கல்லூரிகளுக்கு 15 நாட்களுக்கு ஒரு முறை சென்று மாணவிகளுடன் கலந்துரையாடி மாணவிகளுக்கு ஏற்படும் பிரச்சனைகள் குறித்து உடனுக்குடன் தெரியப்படுத்த வேண்டும் எனவும், போலீஸ் அக்காவின் தொலைபேசி எண் மாணவிகளுக்கு கொடுக்கப்பட வேண்டும் என்றும், மாணவிகளிடம் இருந்து பெறப்படும் தகவல்கள் ரகசியம் காக்கப்படுவதுடன், இது குறித்து உடனடியாக துரித விசாரணை மேற்கொண்டு சட்டப்படியான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும், போலீஸ் அக்காவிடம் மாணவிகள் எந்த தயக்கமும் இன்றி தகவல்களை தெரிவிக்கவும், காவல் துறைக்கும் மாணவிகளுக்கும், போலீஸ் அக்கா ஒரு பாலமாக இருந்து செயல்பட வேண்டும் என்று அறிவுரை வழங்கினார்கள்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்
சண்முகநாதன்