தேனி: அரசு மதுபான கடைகள் அடைக்கப் பட்டுள்ள நிலையில் குடிமகன்களுக்கு கள்ளசாராயம் சப்ளை செய்யப்படுவதாக புகார் எழுந்தது. கம்பம் அருகே கருநாக்கமுத்தன்பட்டி மலையில், கள்ளச்சாராயம் காய்ச்சி மர்ம நபர்கள் பதுக்கி வைத்திருப்பதாகமதுவிலக்கு போலீஸார்க்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து மாவட்ட மதுவிலக்கு எஸ்.பி. திரு.ரமேஷ், கூடலூர் இன்ஸ்பெக்டர். திரு.பாலசுப்பிரமணியம் தலைமையில் கருநாக்கமுத்தன்பட்டியில் மதுவிலக்கு போலீஸ் குழுவினர் தனித்தனி குழுக்களாகப் பிரிந்து வனப்பகுதிகளில் பல்வேறு இடங்களில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். ஆனாலும் கள்ளச்சாராயம் பதுக்கல், மற்றும் சாராயம் காய்ச்சுவது உள்ளிட்ட அறிகுறிகள் சிக்கவில்லை. தேனி மாவட்ட மலைப்பகுதியில் தொடர்ந்த மதுவிலக்கு போலீசார் உள்ளிட்ட பகுதிகளில் யாரேனும் கள்ளச்சாராயம் காய்ச்சுபவர்கள், உடனடியாக உத்தமபாளையம் மதுவிலக்கு போலீசாருக்கும், தேனி மாவட்ட போலீஸார்க்கும் தகவல் தெரிவிக்க அறிவுறுத்தியுள்ளனர்.