தேனி: தேனி மாவட்டத்தில் கொரானா ஊரடங்கில் மதுபாட்டில் வாங்கி பதுக்கி வைத்து விற்பனை செய்பவர்கள் கண்காணிக்கப்படுகின்றனர்.தேனி அருகேகடமலைக்குண்டு அருகே குமணன்தொழுவில் ஊரடங்கினால், மது பாட்டில்களை மொத்தமாக வாங்கி விற்பனைக்காக பதுக்கி வைத்திருப்பதாக, மயிலாடும்பாறை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதன் அடிப்படையில் குமணன்தொழு கிராமத்திற்கு போலீசார் சென்றனர். இதில் வெள்ளையன் என்பவரின் வீட்டில் சோதனை மேற்கொண்டனர். சோதனையில் வீட்டில் பதுக்கி வைத்திருந்த 1151 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக வெள்ளையன் (வயது 38) மற்றும் வனராஜ் (46) ஆகியோரை கடமலைகுண்டு போலீசார் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.