தேனி: பரவி வரும் கொரானா நோய்தொற்றில் இருந்து காக்கும் வகையில், தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாய்சரண் தேஜஸ்வி, உத்தரவுப்படியும், போடிநாயக்கனூர் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் பார்த்திபன், அறிவுரைப்படியும் சின்னமனூர் காவல் நிலையம்ஆய்வாளர் லாவண்யா, சார்பு ஆய்வாளர் கதிரேசன், மற்றும் காவல் துறை ஊழியர்கள் அனைவரும் சார்பில் காவல் அதிகாரிகள் மற்றும் காவலர்களுக்கு நோய்த்தொற்று பரவிவரும் இந்தச் சூழலில் கொரானா நோய் தொற்றிலிருந்து பாதுகாத்துக் கொள்ளும் வகையில் காவலர்களுக்கு நீராவி பிடிக்கும் அமைப்பு ஏற்படுத்தப்பட்டு அதன் மூலம் காவல் அதிகாரிகள் மற்றும் காவலர்களுக்கு நீராவி பிடித்தார்கள். இதன்மூலம் நோய் தொற்று குறையும் என நம்பிக்கை தெரிவித்தனர்.