மதுரை : மதுரை ,சமயநல்லூர் அருகே கள்ளிக்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் கண்ணன்.
இவர் வீட்டில் , 14 பவுன் மற்றும் 4 லட்சத்தி 45 ஆயிரம் ரூபாயை மர்ம அவர்கள் திருடி சென்றதாக சமயநல்லூர் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்து இருந்தார்.
இது தொடர்பாக, காவல்துறையினர் விசாரித்து வந்த நிலையில், கிராமத்தின் சார்பாக தண்டோரா போடப்பட்டு திருடு போன நகை மற்றும் பணத்தை கொண்டு வந்து வைக்கும்படி கேட்டுக் கொண்டனர். அதைத் தொடர்ந்து, கிராமத்தில் மின்சாரம் துண்டிக்கப்
பட்டிருந்தது இருட்டை பயன்படுத்திய திருடர்கள் திருடிய நகை மற்றும் பணத்தை யாருக்கும் தெரியாமல், திருடிய வீட்டின் முன்பு வந்து வைத்து விட்டு சென்று விட்டனர். நகை மற்றும் பணம் திரும்ப கிடைத்ததில் கண்ணனுக்கு மகிழ்ச்சியாக இருந்தாலும் திருடியவர் யார் என்பது உறுத்தலாக இருந்ததால் காவல்துறை மூலம் திருடிய நபர்களை தேடும் பணி நடைபெற்றுக் கொண்டிருப்பதாக தெரிவித்தார். மேலும், இது சம்பந்தமாக காவல் துறையினர் விசாரித்து வருவதாக தெரிவித்தனர். மதுரை அருகே திருடிய நகை மற்றும் பணத்தை திருடர்களே வீட்டின் முன்பு வைத்து விட்டு சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரையிலிருந்து நமது நிருபர்

திரு.ரவி