கிருஷ்ணகிரி: ஜம்மு காஷ்மீர் மாநிலம் பெஹல்காம் என்ற இடத்தில் பயங்கரவாதிகள் நடத்திய திடீர் தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. பெஹல்காம் தாக்குதலை தொடர்ந்து நாடு முழுவதும் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அந்த வகையில் தமிழக எல்லையான கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே உள்ள ஜூஜூவாடி சோதனைச் சாவடியில் நேற்று போலீசார் தீவிரவாதிகளின் ஊடுருவல் குறித்து தீவிர வாகன சோதனைகளை மேற்கொண்டனர். அண்ட மாநிலங்களிலிருந்து தமிழகத்திற்குள் சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் நுழையும் வாகனங்களை தடுத்து நிறுத்தி தீவிர சோதனை செய்தனர்.
கிருஷ்ணகிரியிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.S.அஸ்வின்