திருச்செந்தூர்: திருச்செந்தூர் போக்குவரத்து போலீசார் பொதுமக்களிடையே கொரானா குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக திருச்செந்தூர் அரசு மருத்துவமனைஅருகில் உள்ள ரவுண்டானா மற்றும் பேருந்து நிலையம் முன்பு என இரண்டு இடங்களில் சாலையின் நடுவில் மிகப்பெரிய கொரோனா வைரஸ் ஓவியம் வரைந்துள்ளனர்.
மேலும் ஓவியத்தின் அருகில் நடந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் ஏஎஸ்பி ஹர்ஷ்சிங் பேசியதாவது: நாடு முழுவதும் கொரோனா தாக்கத்தை கட்டுபடுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த நமது நகரில் சாலையில் இந்த ஓவியம் வரைந்துள்ளோம். கொரானாவை கட்டுபடுத்த பொதுமக்கள் கட்டாயம் தடுப்பூசி போடுங்கள்,
வெளியில்வரும் போது சமூக இடைவெளியை கடைபிடியுங்கள், மாஸ்க் அணியுங்கள், தேவையில்லாமல் வீட்டில் இருந்து வெளியில் வரவேண்டாம் என்று பேசினார்.
நிகழ்ச்சியில் இன்ஸ்பெக்டர் ஞானசேகரன், டிராபிக் எஸ்ஐ வேல்முருகன, டிராபிக் தலைமை காவலர் சண்முகம் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.