- கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர். R. ஸ்டாலின் IPS அவர்களின் சிறப்பு ஏற்பாட்டின் படிபோலீசார் மற்றும் ஊர்க்காவல் படை ஆளிநர்கள் பயன்பெறும் வகையில் ஏற்பாடு செய்துள்ள இலவச மருத்துவ சிறப்பு முகாம் மாவட்ட ஆயுதப்படையில் வைத்து நடைபெற்றது. மேலும் காவலர்கள் மற்றும் அதிகாரிகள் பொது மருத்துவம் இதயவியல் மருத்துவம், மூளை நரம்பியல் மருத்துவம், சிறுநீரகவியல் மருத்துவம், பொது அறுவை சிகிச்சை மகளிர் மருத்துவம், கண் மற்றும் பல் மருத்துவம்,காது மூக்கு தொண்டை மருத்துவம்,எலும்பியல் மருத்துவம், மனநல மருத்துவம், ஆகிய மருத்துவ சிகிச்சைகளைமாபெரும் சிறப்பு மருத்துவ முகாமில் பெற்றனர். இதில் பொன் ஜெஸ்லி சூப்பர் ஸ்பெசிலிட்டி மருத்துவமனை மருத்துவர்கள் கலந்து கொண்டு சிக்கிளித்தனர். இந்நிகழ்ச்சியில் குழந்தைகள் மற்றும்பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தடுப்பு பிரிவு மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு. மதியழகன், சைபர் கிரைம் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு. நாகசங்கர், ஆயுதப்படை துணை காவல் கண்காணிப்பாளர் திரு.ஜெயச்சந்திரன் , காவல் உதவி ஆய்வாளர்கள் மற்றும் காவல் ஆளிநர்கள் கலந்து கொண்டனர்.
















