கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் சிப்காட் போலீசாருக்கு கோவிந்த அக்ரஹாரம் எஸ்.எஸ்.நகர் பகுதியில் ஒரு குடோனில் அனுமதியின்றி பட்டாசுக்கள் வைத்திருப்பதாக காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது . தகவலின் பேரில் போலீசார் நடத்திய சோதனையில் 7, 830 வெடி பெட்டிகள் இருப்பது தெரிய வந்தது. மேலும் விசாரணையில் பட்டாசுக்களை வைத்திருந்தது விருதுநகர் மாவட்டம் வேம்பங்குட்டை வட்டம் மாதன்கோவில்பட்டி பகுதியை சேர்ந்த செல்வகுமார் (39). என தெரிய வந்தது. இது குறித்த புகாரின் பேரில் சிப்காட் போலீசார் வழக்குப்பதிவு செய்து செல்வகுமாரை கைது செய்தனர். மேலும் சுமார் ரூ. 17 லட்சம் மதிப்புள்ள பட்டாசுகள் பறிமுதல் செய்யப்பட்டன.
கிருஷ்ணகிரியிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.S.அஸ்வின்