கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி போலீசார் சுண்டகிரி பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த பகுதியில் சாலையில் விபத்துக்குள்ளாகி நின்ற காரை போலீசார் கார் அருகில் சென்று பார்த்தபோது அதில் யாரும் இல்லை. இதை அடுத்து போலீசார் காரில் சோதனை செய்த போது அதில் மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டு இருந்தது. இதை போலீசார் பிரித்து பார்த்த போது 634 கிலோ குட்கா இருப்பது கண்டறியப்பட்டது. கார் விபத்தில் சிக்கியதால் அதில் இருந்தவர்கள் குட்காவை விட்டு தலைமறைவாகி விட்டது தெரிந்தது. இதை அடுத்து போலீசார் ரூ. 4 லட்சத்து 15 ஆயிரம் மதிப்பிலான குட்கா மற்றும் காரை பறிமுதல் செய்தனர். மேலும் இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கிருஷ்ணகிரியிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.S.அஸ்வின்