திண்டுக்கல் : திண்டுக்கல் ஒட்டன்சத்திரம் அருகே அம்பிளிக்கையை சேர்ந்த சுரேஷ்(29). இவர் அதே பகுதியை சேர்ந்த அ.தி.மு.க பிரமுகரான நடராஜன் என்பவரிடம் கார் டிரைவராக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில், கடந்த 17-ந்தேதி நடராஜனின் நெய் நிறுவனத்தில் பணம் கையாடல் செய்ததாக சுரேசை தனது வீட்டிற்கு வரவழைத்து அங்கு அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது. இதில், சுரேஷ் மர்மமான முறையில் இறந்தார். உடலை வீட்டில் கொண்டு சேர்த்தனர். அவரது தாயார் அக்கம்பக்கத்தில் உள்ளவர்களுக்கு தெரிவித்து சுரேஷ் உடலை எரித்துவிட்டார். இந்நிலையில், சுரேஷ் அடித்து கொலை செய்யப்பட்டதாகவும், இது வெளியில் தெரியாமல் இருக்க அவரது உடலை எரித்து விட்டதாகவும் புகார் எழுந்தது. இதனையடுத்து, அம்பிளிக்கை போலீசார் எரிக்கப்பட்ட சுரேஷ் சாம்பலை போலீசார் எடுத்துச்சென்றனர். அவர் அடித்து கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா என போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி