கன்னியாகுமரி : கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் *திரு.E.சுந்தரவதனம் IPS அவர்கள்,* பண்டிகை நாட்களில் சாலை போக்குவரத்து விதிமுறைகளை கடைபிடிக்காமல் பொது மக்களுக்கு ஆபத்து ஏற்படுத்தும் வகையில் வாகனத்தை இயக்குபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார்கள். உத்தரவுபடி,(24-12-2024) கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் போலீசார் வாகன தணிக்கை, மற்றும் ரோந்து பணிகளில் கிறிஸ்துமஸ் அதிகாலை வரை ஈடுபட்டனர். பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் குடிபோதையிலும், அதிவேகமாகவும், அதிக சத்தம் எழுப்பும் சைலன்ஸர்களை பொருத்தியும், வாகன ஓட்டுநர் உரிமம் இல்லாமலும் வாகன சாகசத்தில் (Bike race) ஈடுபட்ட 186 இருசக்கர வாகனங்களுக்கு மோட்டார் வாகன சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. விதிமீறலில் ஈடுபட்ட வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டது.
மேற்படி நடவடிக்கையானது மாவட்ட முழுவதும் வரும் புத்தாண்டு வரை மேலும் தீவிர படுத்தப்படும் எனவும்,18 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் இந்த செயல்களில் ஈடுபட்டால் அவர்களுடைய பெற்றோர்களின் மீதும் வழக்கு பதிவு செய்யப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் *திரு. E. சுந்தரவதனம் IPS அவர்கள்* எச்சரித்தார்கள். தொடர்ச்சியாக சாலைகளில் வாகன சாகசத்தில் ஈடுபடும் இளைஞர்களின் சமூக வலைதள கணக்குகளும் (Facebook, Instagram) தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது எனவும், பண்டிகை நாட்களை பொதுமக்களுக்கு எவ்வித இடையூறும் இன்றி பாதுகாப்பான கொண்டாட்ட முறைகளில் ஈடுபட மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளார்கள்.