திண்டுக்கல்: தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு மத்திய பாதுகாப்புபடையினர் திண்டுக்கல்லுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் திண்டுக்கல் மாவட்ட S.P.பிரதீப் உத்தரவின் பேரில் நகர் DSP.கார்த்திக் தலைமையில் நகர் வடக்கு காவல் நிலைய சார்பு ஆய்வாளர்கள் வாணி, பிரபாகரன் மற்றும் காவலர்கள் மத்திய பாதுகாப்பு படை இன்ஸ்பெக்டர் வடகர், சப் இன்ஸ்பெக்டர் விஜய்மீனாள், ரவி ஞானதாஸ் உள்ளிட்ட 16 மத்திய பாதுகாப்பு படையினருடன் இணைந்து ரவுண்ட் ரோடு பகுதியில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். திண்டுக்கல் நகர் பகுதிகளுக்குள் வரும் இருசக்கர வாகனங்கள் மற்றும் நான்கு சக்கர வாகனங்களை தீவிர சோதனை மேற்கொண்டனர் மேலும் உரிய ஆவணங்கள் உள்ளதா என்று சோதனை செய்தனர்
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா
















