மதுரை : மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே வாலாந்தூரில் அமைந்துள்ளது. பிரசித்தி பெற்ற அங்காள ஈஸ்வரி திருக்கோவில்,ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்லும் இந்த திருக்கோவிலில் தினசரி பூஜைகளை முடித்துவிட்டு கோவில் பூசாரி வினோத் கோவிலை பூட்டிவிட்டு செல்வது வழக்கம், அவ்வாறு இரவு 7:40 மணியளவில் கோவிலை பூட்டிவிட்டு சென்றுவிட்டு, அதிகாலை 5 மணியளவில் கோவிலை திறந்த போது கோவில் மூல ஸ்தானத்தின் முன்பு இருந்த இரு சில்வர் உண்டியல்கள் உடைக்கப்பட்டு அதில் இருந்த பணம் மர்ம நபர்களால் கொள்ளையடிக்கப் பட்டிருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்து கோவில் செயல் அலுவலர் மற்றும் வாலாந்தூர் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தார்.
விரைந்து வந்த வாலாந்தூர் காவல் நிலைய போலீசார் செயல் அலுவலர் ஜெயராமன் அளித்த புகாரின் பேரில், வழக்குப் பதிவு செய்து, மதுரை மாவட்ட தடயவியல் நிபுணர் குழுவினரின் உதவியுடன் கைரேகை பதிவுகளை சேகரித்து வருகின்றனர். மேலும் ,
கோவில் வளாகத்தில் இருந்த சிசிடிவி காட்சிகள் அடங்கிய ஹார்டிஸ்க் -யையும் திருட வந்த மர்ம நபர்கள் திருடி சென்ற நிலையில் எவ்வளவு பணம் கொள்ளை போனது என்றும், கோவில் உண்டியலை உடைத்து திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கியுள்ளனர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்

திரு.ரவி