சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை மாந்தோப்பு தெருவை சேர்ந்த சரவணன் என்பவருக்கும் ராம்நகர் பகுதியைச் சேர்ந்த அகிலாவிற்கும் கொடுக்கல் வாங்கல் இருந்துள்ளது. அகிலா மற்றும் அவரது நண்பர் இராமநாதபுரம் மாவட்டம் தேணிக்கரையை சேர்ந்த காமாட்சியும் சரவணன் வீட்டிற்கு சென்று பணம் கேட்டு உள்ளனர். இதில் வாக்குவாதம் ஏற்பட்டதில் காமாட்சி மற்றும் அகிலா இருவரும் மறைத்து வைத்திருந்த கத்தியால் சரவணன் வலது கையில் குத்தினார். படுகாயம் அடைந்த சரவணன் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார் சம்பவம் குறித்து தேவகோட்டை டவுன் போலீசார் வழக்குப்பதிந்து காவல் ஆய்வாளர் கணேசமூர்த்தி தலைமையில் போலீசார் இருவரையும் தேடி வருகின்றனர். இச்ச சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.அப்பாஸ் அலி